என் உடல் உயிர்த்தது
நீ பட்ட துன்பத்தில்
என் இதயம் துடித்தது
நீ விட்ட கண்ணீரில்
என்னில் ஈரம் துளிர்த்தது
நீ என்னை ஈன்ற நொடியில்
உன் கதறும் குரல் கேட்ட எனக்கு
வாழ்வின் வலி புரிந்தது
நீ என்னை ஈன்றபின்
பெருமூச்சு விட்டு
கண்ட அமைதியில் எனக்கும்
வாழ்வின் அமைதி தெரிந்தது
நீ என்னை அன்போடு
அள்ளி அணைத்தபோது
எனக்கும் வாழப்பிடித்தது

2 comments:
கவிதைக்குப் பொய் அழகு எங்கிருந்தேன். உண்மையும் அழகிதானஅழகு தான் என்பதை உங்கள் கவிதையிலிருந்து புரிந்து கொண்டேன்
சிந்து,
கவிதைகளை பொய்யென்றா இதுவரை நினைத்திருந்தீர்கள். கவிதைகள் என்பது எப்போதும் பொய்யானதல்ல. ஒரு தடவை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தெரிவித்தார் இப்படி,
அவர் ஒரு பாடலில் "கவிதைக்குப் பொய்யழகு" என்று எழுதியிருக்கிறார்.
அதன் சர்ச்சைக்கு அவர் சொன்ன பதில், கவிதை என்பது உன்மை,அந்த உன்மையை மிகைப்படுத்த கொஞ்சம் பொய் சேர்த்தால் இன்னும் அழகாகும் என்றார்.
உன்மையில் அதன் பிறகுதான் எனக்கும் சர்ச்சை தீர்ந்தது.
Post a Comment