Wednesday, March 4, 2009

காதல் ரப்பர் முத்திரை

தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்

அன்பின் மறுபெயர் காதல்
பாசத்தின் இருப்பிடம் காதல்
ஆன்மீக பற்றின் இடைச்சுவர் காதல்
முக்தியின் அடித்தளம் காதல்
ஏற்றுக்கொள்கிறேன்

மோகத்துக்கும் காமத்துக்கும்
இடைப்படட இடைத்தரகர் காதல்
என்றால் முடியவில்லை ஏற்றுக்கொள்ள

காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு
போகும் கரும்புச்சக்கையல்ல
இனிக்கும் போது மட்டும்
இனிப்பை தேடியழையும்
எறும்புகளைப் போல

நீங்கள் செய்யும் அந்த
அறுவருப்பான உறவுக்கு
காதலென்ற முகமூடி
அணிவித்து காதலை தூக்கிலிட
நேரம் குறிக்காதீர்கள்

காதல் நிகழ்கால
ஒப்பந்தக் கூண்டில்
ஒப்புதலின்றி நிற்கிறது
சந்தர்ப்ப சூழ்நிலையின்
சூன்ய பிரதேசமானதா காதல்

உங்கள் காதல்
உங்கள் காற்சட்டையில்
உறங்கி கிடக்கும் பணப்பையின்
பாரத்தில் நடனமாடுகிறது.

உல்லாச விடுதியின்
படுக்கையறைக்கும்
ஆளில்லா சினிமாக் கொட்டகையின்
இருக்கைக்கு அடியிலும்
கழுத்திருகிப் போய் அவலக்குரல்
விடுகிறது உங்கள்
காதல்

இன்றைய சாஜகான்கள்
காதலுக்காய் காதலிக்காய்
சமாதிக்கட்டியிருக்கிறார்கள்
கைத்தெலைபேசியில்

உங்கள் உணர்ச்சியெனும்
வாளினால் காதலின்
கழுத்தை வெட்டி
ரத்தம் குடித்து காதலை
உயிரருத்து ஊசலாடவைப்பதுதானா
உங்கள் நோக்கம்...!

16 comments:

த.அகிலன் said...

//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்//

நல்ல கவிதைக்கான தொடக்கம்..ஆனா மிச்சம் வழக்கமான வரிகள்.. முயற்சியுங்கள்..

SASee said...

நன்றி அகிலன் (இப்படி அழைத்ததற்கு மன்னிக்கவும். நீங்கள் என்னை விட வயது மூத்தவரா என்பது எனக்கு தெரியாது)

எனது பிழைகள் தான் எனக்கும் தேவை
திருத்திக்கொள்ள.....
முயற்சிக்கிறேன்....

வருகிறேன் உங்கள் வலைக்கு.

Sinthu said...

நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது...

SASee said...

"Sinthu said...

நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது..."

உள்ள கோபத்தை இப்படி எழுதியென்றேனும் தீர்த்துக்கொள்ளும் ஒரு நப்பாசைதான்

shanthru said...

காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு
போகும் கரும்புச்சக்கையல்ல
இனிக்கும் போது மட்டும்
இனிப்பை தேடியழையும்
எறும்புகளைப் போல...........

நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்....

Sinthu said...

"
SASee said...
"Sinthu said...

நீங்கள் சொல்வது தான் உண்மையில் நடக்கிறது..."

உள்ள கோபத்தை இப்படி எழுதியென்றேனும் தீர்த்துக்கொள்ளும் ஒரு நப்பாசைதான்"

யார் மேல் என்ன கோபம்....?
எதை என்றாலும் பேசித் தீர்க்க வேண்டும்..

Sinthu said...

"
shanthru said...
காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு
போகும் கரும்புச்சக்கையல்ல
இனிக்கும் போது மட்டும்
இனிப்பை தேடியழையும்
எறும்புகளைப் போல...........

நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்...."
கவிதையில் பேய் பிசாசு என்றேல்லமா ஏச முடியும் சந்துரு அண்ணா.

SASee said...

"shanthru said...

நல்ல வரிகள வாழ்த்துக்கள் .... இப்படிப்பட்டது காதலல்ல......... நல்ல காதலை கொட்சைப்படுத்தும் பிசாசுகள் என்று சொல்லலாம்...."

நன்றி ஷந்துரு,

காதல் படும் பாடு உங்களுக்கும் தெரிகிறது போலும்..


வருகிறேன் உங்கள் வலைக்கு.

ஒரு சின்ன விடயம் ஷந்துரு, உங்களுக்கு சிந்துவும் ஒரு பின்னூட்டம் தந்திருக்காங்க.

SASee said...

Sinthu said...

//யார் மேல் என்ன கோபம்....?
எதை என்றாலும் பேசித் தீர்க்க வேண்டும்..//

இது பேசித் தீர்க்கிற விசயமில்ல...!
தீத்துட்டு பேசுற விடயம்...!

கொஞ்சம் சினிமா ஸ்டைலோட சொன்னேன்

சிந்து ஷந்துரு க்கு நான் சொல்ல வேண்டியத நீங்களே சொல்லிட்டிங்க....

tamil24.blogspot.com said...

//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்//

இன்னும் காதலின் இனிமை புதுமையென திரும்பத்திரும்ப வருவது ஒரே எண்ணங்களாக இருக்கிறது காதலின் பகிர்வுகள் கவிதைகளாக.

வாசியுங்கள் சசி நிறையவே. வளமான ஒரு கவிஞனைக் காலம் தரும் நமக்கு.

தத்தி விழுந்து தடக்கித்தானே நாங்கள் குழந்தைப்பருவம் தாண்டி வருகிறோம். காலமாற்றம் எம்மில் நிறையவே மாற்றங்கள் தந்துள்ளது.

உங்கள் கவிதைகளும் நிறையவே முன்னேறும்.

பாராட்டுக்கள்.

சாந்தி

கலை - இராகலை said...

//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்//

ஆரம்பமே அசத்தல் பிறகென்ன சொல்லவா வேண்டும்.

கலை - இராகலை said...

ஏன் அடுத்த படைப்பு தாமதம்? விரைவாக வங்க காத்திருக்கமுல்ல‌

SASee said...

tamil24.blogspot.com said...

//வாசியுங்கள் சசி நிறையவே. வளமான ஒரு கவிஞனைக் காலம் தரும் நமக்கு.

தத்தி விழுந்து தடக்கித்தானே நாங்கள் குழந்தைப்பருவம் தாண்டி வருகிறோம். காலமாற்றம் எம்மில் நிறையவே மாற்றங்கள் தந்துள்ளது.

உங்கள் கவிதைகளும் நிறையவே முன்னேறும்.//


தங்களின் பார்வையில் என் கவிதை பெற்ற உருவை என்னால் ஊகிக்க முடியும்....

தங்களின் கருத்துரை உண்மையாகவே என்னைக் உருக்கமாக சிந்திக்க வைத்தது...
நான் என்ன எழுதிகொண்டிருக்கின்றேன் என்று,
உண்மையில் நான் இருக்கும் துறையோடு ஒப்பிடுகையில் வாசித்தல் என்பது கணினியோடாகிவிட்டது.
பள்ளிக்காலங்களில் தான் பலவற்றையும் வாசிக்க கிடைத்தது.
இப்போதும் வாசிக்க முயல்கின்றேன்...நேரம் , வேலைப்பளு ஆகியவற்றோடு பெரிய யுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

நம்புகிறேன் இப்போதல்லா விட்டாலும் எப்போதாவது என்னிடமிருந்தும் நல்ல படைப்பொன்று மலருமென.......

மிக்க நன்றி தங்களின் கருத்துரையையும் இந்த சிறியவனின்
வலையில் பதித்ததற்கு.

தொடர்ந்து என் கிறுக்கல்களுக்கும் உங்கள் கருத்துரையையும் எதிர்ப்பார்க்கின்றேன்.

SASee said...

கலை - இராகலை said...
//ஆரம்பமே அசத்தல் பிறகென்ன சொல்லவா வேண்டும்.//

// ஏன் அடுத்த படைப்பு தாமதம்? விரைவாக வங்க காத்திருக்கமுல்ல‌//


முதல் வருகைக்கும்
கருத்துரைத் தருகைக்கும் - கலை
நன்றி நன்றி

உண்மையில் என் கவிதை உங்களை அசத்தியிருந்தால் நான் கொஞ்சமேனும் பாக்கியசாலி...

வேளைப்பளு அதுதான் படைப்புகளை விரைவாக தரமுடியவில்லை.
இருந்தும் தொடர்ந்து வரும்.

King... said...

த.அகிலன் said...
//தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்//

நல்ல கவிதைக்கான தொடக்கம்..ஆனா மிச்சம் வழக்கமான வரிகள்.. முயற்சியுங்கள்..
\\

அகிலனின் பின்னூட்டம் கிடைப்பதே அரிது தம்பி அதையேதான் நானும் சொல்கிறேன்...

SASee said...

King... said...

//அகிலனின் பின்னூட்டம் கிடைப்பதே அரிது தம்பி அதையேதான் நானும் சொல்கிறேன்...//

திரு.த.அகிலன் அவர்களதும்
தாங்களதும் பின்னூட்டங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன்.


தொடர்ந்து தங்களது பின்னூட்டத்தை எதிப்பார்க்கின்றேன்.....