உன் வேகம் சொல்
விவேகம் கொடு...!
உனது விழிகளின்
கூர்மையின்
ஆழம் காண்பி....!
கற்றுக் கொள்
காவியம் எழுது
கல்வியை உன் விரல்
நுனியில் தொடுத்து வை...!
ஆனவம் விடுத்து
அன்பு கொள்
கடவுளை உன்னிடத்தில்
காட்டு.....!
உனது தோல்வியில்
இன்பப்படு
வெற்றி கொள்....!
உனது கற்பின்
தூய்மைக்குப் பூஜை செய்
இரகசியம் கொள்...!
சமைத்துப்பார்
சுவைத்துப்பார்
பிழைதிருத்து....!
உனது பிழைவிட்டு
பிறர் வீட்டு சுவையில்
பிழையறிவதை விட்டு விடு....!
உனது அழகுக்கு அர்த்தம்
கற்பித்து கோபப்படு...!
உனது தாய்மைக்கு
வணக்கம் கேட்டு
உண்ணா விரதம்
செய்....!
பூஜ்ஜியத்தில்
ஒரு ராஜ்ஜியம் செய் - உனது
பேய்களையும் பிசாசுகளையும்
அதில் சிறையிடு....!
உனது தடைகளை
உடைத்தெறி
உனது வெட்கத்தை
பாடப்புத்தகமாக்கு
திறந்து பார்
மூடிவை...!
வல்லினம்
மெல்லினம்
இடையினம் சேர்த்து
அகிம்சை போர் செய்....!
பயனில்லையேல்
ஆயுதமேந்து - உனது
கத்திக்கும் ரத்தம் காட்டு
உனது நாட்டின்
கொடியை நீயே ஏற்று....!

பெண்ணே உன்னை
உனக்குள் தேடிப்பார்....!
4 comments:
"பெண்ணே உன்னை
உனக்குள் தேடிப்பார்....! "
விடை கிடைக்காது இந்தப் புதிருக்கு...
Sinthu,
பெண்ணின் விடுதலை பெறும் பகுதி பெண்ணின் சிந்தனையில் தங்கியிருக்கிறது.
கற்றுக் கொள்
காவியம் எழுது
கல்வியை உன் விரல்
நுனியில் தொடுத்து வை...!///
நல்லா எழுதியுள்ளீர்கள்!!1
தேவா..
thevanmayam said...
கற்றுக் கொள்
காவியம் எழுது
கல்வியை உன் விரல்
நுனியில் தொடுத்து வை...!///
நல்லா எழுதியுள்ளீர்கள்!!1
தேவா..
தேவா மன்னிக்கனும்
நன்றி சொல்ல மறந்துட்டேன்
நன்றி தேவா நன்றி....
Post a Comment