Thursday, February 12, 2009

உடைந்த வானவில்......!

ஒரு ராத்திரியன் புலம்பல்
எனது காதல்.....!
அவசர அவசரமாய்
மீட்டிப்பார்க்க துடித்தது மனம்
இது ஒரு கணப் பொழுதில்
இமைக்கும் கண்ணிமையல்ல
கருவிழி

உடைந்த வானவில்
பசையிட்டு ஒட்டவைத்துள்ளேன்
நான் வாசித்த வயலினில்
அவள் ஸ்ருதி
சேரவேயில்லை இறுதிவரை

அவளின் நினைவுகளை
ஒரு கிண்ணத்திலிட்டு அடிமனதில்
ஒரு ஓரமாய் ஒழித்து வைத்துள்ளேன்
மீட்டிப் பார்க்கும் நினைவுப் பூஜையில்
தீர்த்தமாய்த் தொட்டுப் பருக

என் உயர்தரப் பாடக்கொப்பியில்
பாடதிட்டம் எழுதும் முன்
என்னால் எழுதப்பட்டது அவள்
பெயர்.....? - ஏன்
என் பேனைமுனையின்
தடுமாற்றங்களில் கூட
எனது பெயரின் முதலெழுத்தும்
அவளது பெயரின் முதலெழுத்தும்

அவளிடம் சொல்ல நினைத்த
காதலை பலமுறை என் அறைக்
கண்ணாடியிடம் சொல்லியிருக்கிறேன்
இறுதியில்
என் அறைக்கண்ணாடி தான்
என்னைக் காதலித்தது

எப்படியோ காற்றின் வழியில்
அவள் காதுகள்
என் காதலை அறிந்தும்
அறியாததுமாய்.......!
அவளின் உதிர்ந்த கூந்தல் கூட
காற்றிலடிப் பட்டேனும்
என் பக்கம் வந்ததில்லை

ஒரே ஒரு முறை தொலைவினில்
தொலைபேசியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்
என்னைப் பொறுத்தவரையில்
அது ஒரு விபத்து

பல முறைக் கண்ணாடியிடம்
சொல்லியதை
முதல் முறையாய் அவளிடம்
சொன்னேன்

அவள் சொன்ன பதில்
புகைவண்டி புறப்பட்டு வெகு
நேரமானதாய்

உரையாடல் நேரம் முடிந்தது
தொலை பேசிக்கு
வியர்த்திருந்தது.....!
கண்ணீர் வடித்திருந்தது.....!

உடைந்த வானவில் பசையிட்டு
ஒட்டி வைத்துள்ளேன்
நினைவுகளாய்..........!

4 comments:

தேவன் மாயம் said...

அவளின் நினைவுகளை
ஒரு கிண்ணத்திலிட்டு அடிமனதில்
ஒரு ஓரமாய் ஒழித்து வைத்துள்ளேன்
மீட்டிப் பார்க்கும் நினைவுப் பூஜையில்
தீர்த்தமாய்த் தொட்டுப் பருக
//

கவித்தேன் ருசித்தேன்!!
அருமை! அருமை!!

SASee said...

நன்றி நண்பரே

Sinthu said...

கவிதையைக் கவிதையாகவே பார்த்ததால், ரசிக்க முடிந்தது..அருமையாக இருக்கிறது.. கொஞ்சம் சொல்லுங்களேன் எப்படிக் கவிதை எழுவது என்று?

SASee said...

Sinthu,

ஏதோ கிறுக்கினேன் என்று சொல்ல விரும்பவில்லை,
ஆனாலும் நான் ஒரு கவிதை எழுத பல ஏடுகள் குப்பைத் தொட்டிக்குப் போகின்றது.

எப்படியோங்க நா இன்னோ கவித எழுதுறதுல தவலுற பருவத்துல தாங்க...