Wednesday, March 18, 2009

வெறுமைக்கு விடை தேடி.!

திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?

மணலில் சிதறிக்கிடந்த
நீர்த்துளிகள்.!

வெறுமைக்கு விடை தேடி
வெப்பமேறிக்கிடந்த
மணலில் குப்புறச் சயனித்தேன்!
மணலை முத்தமிட்டது உதடுகள்!

உதட்டோரத்தில் பதிலுக்கு
முத்தமிட்ட நீர்த்துளியொன்று!

உப்புச்சுவை கைத்துப்போனது!
இல்லை
இவை நீர்த்துளிகள் இல்லை!

உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!

மரத்துப் போன
முட்டாள் மனிதா..!

வியர்வைத்துளியோ.!
கண்ணீர்த்துளியோ.!
தொலைத்துப் போனதேனடா.!
உனக்குன் பாட்டன் சேர்த்த
உத்தமச் சொத்து
இதொன்று தானடா.!

நீ தொலைத்த
வியர்வைத்துளிகள்
விற்கப்பட்டு கொள்ளை
லாபமாம்
விற்றுத்தின்ற
கொள்ளை கூட்டம்

ஏப்பம் விட்டுச் சொல்கிறது!

உன் கண்ணீர்த் துளிகள்
மிச்சமிருப்பதாய்
விளம்பரம் பார்த்தேன்!
காப்பாற்றிக்கொள்!

இன்று நீ அலையவிடப்பட்ட
ஆயுள் கைதி!

என் வெறுமைக்கு
விடை..?

17 comments:

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?.......

வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றது .... உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்...

SASee said...

நன்றி சந்ரு

உங்கள் பின்னூட்டம் என்னை மேலும்
ஊக்குவிக்கும்

Anonymous said...

இன்று நீ அலையவிடப்பட்ட
ஆயுள் கைதி!

அர்த்தம் பொதிந்த வரிகள் நண்பா!

kuma36 said...

//உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!//

அழகான வரிகள் சசி

SASee said...

ஷீ-நிசி அவர்களே

நன்றி உங்கள் கருத்துரைக்கு
தொடர்ந்தும் எதிர்ப்பார்க்கிறேன்
உங்கள் கருத்துரையை.

SASee said...

கலை - இராகலை

நன்றி கலை

தேவன் மாயம் said...

திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?

மணலில் சிதறிக்கிடந்த
நீர்த்துளிகள்.!///

அழகான ஆரம்பம்!!!

தேவன் மாயம் said...

உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!///

வரிகள் மிகச்சரளமாக வந்துள்ளன்!

தேவன் மாயம் said...

உன் கண்ணீர்த் துளிகள்
மிச்சமிருப்பதாய்
விளம்பரம் பார்த்தேன்!
காப்பாற்றிக்கொள்!///

கவிதையில் ஒரு புத்திமதி!

SASee said...

thevanmayam said...

// திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?

மணலில் சிதறிக்கிடந்த
நீர்த்துளிகள்.!///

அழகான ஆரம்பம்!!!//

//ஆம் நண்பரே அதிகமாக எனது அதிகமான கவிகளில் முதல் நன்றாக வரும்,
உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!///

வரிகள் மிகச்சரளமாக வந்துள்ளன்!//

சரளம் தான்

//உன் கண்ணீர்த் துளிகள்
மிச்சமிருப்பதாய்
விளம்பரம் பார்த்தேன்!
காப்பாற்றிக்கொள்!///

கவிதையில் ஒரு புத்திமதி!//

யாருக்கு என்ன பயன்?

தங்களிடம் ஒரு வினா?

எனது கவிதை உங்களுக்கு பிடித்ததா?
அல்லது மொக்கையாக பட்டதா..?

வேத்தியன் said...

யப்பா...
நீங்க இலங்கையிலயா இருக்கிறீங்க???
இவ்ளோ நாளும் தெரியாமப் போச்சே...
நானும் இங்க தான்...
முடிந்தால் வந்து பாருங்க...

வேத்தியனின் பக்கம்

ஆதவா said...

நல்ல ஆரம்பம். வெறுமையை உருவப்படுத்தியிருக்கும் கற்பனைக்கு ஒரு சபாஷ்.

அங்கங்கே சில துளிகளை தூவிவிட்டே போகிறீர்கள்.

மணலில் சிதறியவை,
நிழல் திருப்பும் முகம்
வியர்வையின் விற்பனை... என்று அழகான வரிகள்..

வெறுமை, அல்லது ஒன்றுமில்லாமைக்கு விடைகள் நாமாக ஏற்படுத்திக் கொள்ளுவதுதான். சில கேள்விகளுக்கு விடை கிடைக்காததைப் போன்று வெறுமைகளுக்கான விடையும் வெறுமையாகவே இருக்கும்!!!

தொடர்ந்து எழுதுங்க.

தேவன் மாயம் said...

கவிதையில் ஒரு புத்திமதி!//

யாருக்கு என்ன பயன்?

தங்களிடம் ஒரு வினா?

எனது கவிதை உங்களுக்கு பிடித்ததா?
அல்லது மொக்கையாக பட்டதா..//

கவிதை நன்றாக இருந்தது!

SASee said...

ஆதவா,

முதல் வருகைக்கும்
கருத்துரை தருகைக்கும்
நன்றி

தொடரும்....

SASee said...

thevanmayam said...

//கவிதை நன்றாக இருந்தது!//

நன்றி நண்பரே

நட்புடன் ஜமால் said...

வெறுமைக்கு விடை தேடி! ...

வார்த்தைகளின் ஆழம் அழகு

விடைகூட இங்கு வெறுமையாய் தான்

SASee said...

ஜமால் அவர்களே,

என் வெறுமைக்கு விடைச் சொல்ல
முதல் முறையாய் என் வலைக்கும் வந்தமைக்கு நன்றி நன்றி

தொடருவோம்...