Friday, April 3, 2009

பூ இலை முள் பனி



முட்களுக்கிடையில்
பூத்த மலருக்கு
இதழ் மென்மையினை
மறைக்க முடிந்ததா..?

முட்களுக்கிடையில்
பூ மலர்ந்தும்
முள் குத்தி மலருக்கு
ரத்தம் வலிந்ததா..?

பனித்துளிகளை
இலைகள் தாங்கி
நின்றபோதும்
இலையோடு பனித்துளிக்கு
ஒட்டமுடிந்ததா..?

இலையரும்பில்
மொட்டுதித்து
மலர்களை பிரசவித்த
போதும் இலைகளால்
மலர் போல் மணக்க
முடிந்ததா..?

எனது அன்பு
உரமாகியும்
உனது கண்ணீர்
நீராகியும்
மலர்களால்
உதிராமல்
நிலைக்க
முடிந்ததா..?



19 comments:

வேத்தியன் said...

நாந்தே மொதோ...

வேத்தியன் said...

நல்லா இருக்கு சசி...
வாழ்த்துகள்...

SASee said...

வருக வேத்தி
கருத்துரைக்கு
நன்றி வேத்தி.

கடைக்குட்டி said...

//எனது அன்பு
உரமாகியும்
உனது கண்ணீர்
நீராகியும்
மலர்களால்
உதிராமல்
நிலைக்க
முடிந்ததா..?//


நல்லா இருக்கு.. நன்றி..

நம்ம கடக்கி நீங்க வந்து பின்னுட்டமும் ஓட்டும் போடப்போறீங்கள்ல.. அதுக்கு..

நட்புடன் ஜமால் said...

\எனது அன்பு
உரமாகியும்
உனது கண்ணீர்
நீராகியும்
மலர்களால்
உதிராமல்
நிலைக்க
முடிந்ததா..?\\

இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்

(உபயம் இதற்கு மேல் எழுதப்பட்ட வரிகள்)

தேவன் மாயம் said...

வலியப் புனையாமல்,
உரைநடைபோல் இல்லாமல்
நீர்ரோடை போல் கவிதை!!

தேவன் மாயம் said...

பிரமாதம் சசி..

ச.பிரேம்குமார் said...

எளிமையான வார்த்தைகளில் அழகான கவிதை சசி. வாழ்த்துகள் :)

K.J.Laleendren said...

Malaridama pesugirai???
adan mounaththil vidai theda munaigirai...!
Arththangal purigirada????

SASee said...

கடைக்குட்டி said...

//நல்லா இருக்கு.. நன்றி..

நம்ம கடக்கி நீங்க வந்து பின்னுட்டமும் ஓட்டும் போடப்போறீங்கள்ல.. அதுக்கு..//

• நன்றி கடைக்குட்டி

ஒங்க வலைக்கு வருவோமுல்ல....

நட்புடன் ஜமால் said...

//இந்த வரிகளை மிகவும் இரசித்தேன்

(உபயம் இதற்கு மேல் எழுதப்பட்ட வரிகள்)//

• நன்றி ஜமால் அவர்களே..


thevanmayam said...

//வலியப் புனையாமல்,
உரைநடைபோல் இல்லாமல்
நீர்ரோடை போல் கவிதை!!//

thevanmayam said...

//பிரமாதம் சசி..//

• நன்றி தேவா அவர்களே....


பிரேம்குமார் said...

// எளிமையான வார்த்தைகளில் அழகான கவிதை சசி. வாழ்த்துகள் :)//

எனது வலைக்கும் வந்தமைக்கும்
கருத்துரை தருகைக்கும் நன்றி
பிரேம் குமார் அவர்களே.....

SASee said...

K.J.Laleendren said...

Malaridama pesugirai???
adan mounaththil vidai theda munaigirai...!
Arththangal purigirada????///

புரிகிறது புரிகிறது...மச்சி

Anonymous said...

முட்களுக்கிடையில்
பூ மலர்ந்தும்
முள் குத்தி மலருக்கு
ரத்தம் வலிந்ததா..?///

ரொம்ப நல்லாருக்கு! இந்த வரிகள்!

SASee said...

அழகாய் ரசித்தமைக்கு நன்றி
ஷீ-நிசி அவர்களே

ஆதவா said...

உங்கள் தளத்தை நான் பின் தொடரவில்லை ஆதலால் எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இப்போதான் சேர்த்துக் கொண்டேன்!!

ஆதவா said...

முட்கள் இருப்பதே மலர்களைக் காப்பாற்றத்தானே!! உங்களது கேள்விகளுக்கு விடை உங்களிடமே இருக்கிறது!!!

நல்ல கவிதை!! இன்னும் கொஞ்சம் முயலுங்கள்.

SASee said...

நன்றி ஆதவா..
நிச்சயமாக முயல்கிறேன்

தேவன் மாயம் said...

சசி! வணக்கம்!!
அடுத்த பதிவு போடுங்க!!

kuma36 said...

///இலையரும்பில்
மொட்டுதித்து
மலர்களை பிரசவித்த
போதும் இலைகளால்
மலர் போல் மணக்க
முடிந்ததா..?////

நல்லாயிருக்கு

Admin said...

பதிவு சூப்பர்...... தொடருங்கள்....

எனது வலைப்பதிவு மாயமாகிவிட்டது புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன் என்னை தொடருங்கள்..... ள்....